வட்டாட்சியர் அலுவலகம் வேப்பூர்
அமைதிபேச்சுவார்த்தை கூட்டம்
நான்.20.10.2022
வட்டாட்சியர் அலுவலகம் வேப்பூர்
அமைதிபேச்சுவார்த்தை கூட்டம்
Paper News 21.10.2022
வேப்பூர் வட்டம், சிறுநெசலூர் கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு 21.10.2022 அன்று காலை 11.00 மணியளவில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடர்பாக அதன் அடிப்படையில் இன்று 20.10.2022 மாலை பிற்பகல் 02:30 மணியளவில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் (பொ) தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் விருத்தாசலம் கோட்ட கலால் அலுவலர், வேப்பூர் காவல் உதவி ஆய்வாளர், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த திரு.ராஜா உடையார், திரு.கந்தன் மற்றும் நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த திரு.கோபி மற்றும் நிர்வாகிகள், தே.மு.தி.க கட்சி நிர்வாகி திரு.செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேற்படி கூட்டத்தில் கீழ்கண்டவாறு முடிவுகள் எட்டப்பட்டுள்ளது.
1. மாவட்ட மேலாளர் (TASMAC) கடலூர் அவர்களின் தொலைபேசியில் வட்டாட்சியரிடம் தெரிவித்தற்கிணங்க மேற்படி சிறுநெசலூர் கிராமத்தில் இயங்கி வரும் மதுபான கடை (கடை எண்.2544) 15 நாட்களுக்குள் (நவம்பர் 04-2022) 05.11.2022 மேற்படி கடை மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்படுகிறது.
எனவே 21.10.2022 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற இருந்த பூட்டு போடும் போராட்டம் கைவிடப்படுகிறது என ஒருமனதாக முடிவு எட்டப்பட்டது.















கருத்துகள்
கருத்துரையிடுக