NALLUR ஒன்றிய பாஜக
செயற்குழு கூட்டம்
கடலூர் கிழக்கு மாவட்டம், பாரதிய ஜனதா கட்சியின் நல்லூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் கந்தன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய பொதுச் செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் செல்வகுமார் வரவேற்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நல்லூர் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக அதிகாரிகளிடம் உரிய ஆதாரங்களுடன் முறையீடு செய்வது என்றும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் வேப்பூர் ஊராட்சியை தரம் உயர்த்தி பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றும்

வேப்பூரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை குறுக்கே பேருந்து நிலையம் எதிர்புறம் கடந்த ஐந்தாண்டுகளாக கிடப்பில் கிடக்கும் மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணிக்கு வராததை கண்டித்தும் பொதுமக்களை அலைக்கழிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் ஒருமனதாக விவாதித்து தீர்மானமாக நிறைவேற்றினர்.இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் திமுகவிலிருந்து விலகி சுமார் 20 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
















கருத்துகள்
கருத்துரையிடுக